சென்னை உதயம் தியேட்டர் உரிமையாளர் அதிரடி கைது..!

சென்னை உதயம் தியேட்டர் உரிமையாளர் மணி. இவர்கள், பைனான்சியர் போத்ராவிடம் கடந்த 2002ம் ஆண்டுமணி ரூ.35 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்காக காசோலையும் கொடுத்தனர்.  

Chennai Udayam theater owner arrested

செக் மோசடி வழக்கில் சென்னை உதயம் தியேட்டர் உரிமையாளர் மணி  கீழ்ப்பாக்கம் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை உதயம் தியேட்டர் உரிமையாளர் மணி. இவர், பைனான்சியர் போத்ராவிடம் கடந்த 2002ம் ஆண்டு ரூ.35 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்காக  உதயம் தியேட்டர் உரிமையாளர் போத்ராவிற்கு கொடுத்த செக் வங்கியில் பணம் இல்லாமல் பவுன்சாகி திரும்பி விட்டது. இதுதொடர்பாக பைனான்சியர் போத்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்நிலையில், செக் மோசடி வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசார்  உதயம் தியேட்டர் உரிமையாளர் மணியிடம்  விசாரணை நடத்திய பிறகு கைது செய்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios