Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் விஸ்வரூம் எடுக்கும் கொரோனா... அதுவும் இந்த 2 மண்டலங்களில் மட்டும் புதிய உச்சம்...!

சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளி 3 ஆயிரத்து 711 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Chennai Two areas Corona cases registered Above 3 thousand
Author
Chennai, First Published Apr 21, 2021, 2:08 PM IST

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 10,986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 13 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸ் தன்னுடைய கோரமுகத்தை காட்டி வருகிறது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளி 3 ஆயிரத்து 711 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Chennai Two areas Corona cases registered Above 3 thousand

இப்படி கொரோனா தொற்று கொத்து, கொத்தாக பரவி வருவதால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ள தெருக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையைப் பிற இடங்களை விட குறிப்பிட்ட இரு மண்டலங்களில் மட்டும் கொரோனா தொற்றின் வேகம் தீவிரமாக இருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Chennai Two areas Corona cases registered Above 3 thousand

சென்னை மாநகராட்சி கொரோனா பரவல் குறித்த எண்ணிக்கையை மண்டல வாரியாக பிரித்து அறிவித்து வருகிறது. அதன்படி சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணா நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 3 ஆயிரத்து 044 பேருக்கும், அண்ணா நகர் மண்டலத்தில் 3 ஆயிரத்து 041 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 மண்டலங்களில் தலா 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios