Asianet News TamilAsianet News Tamil

சென்னை - திருப்பதி இடையே 15 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை சென்ட்ரல், திருப்பதி இடையே இயக்கப்படம் விரைவு ரயில்களின் சேவை 15 நாட்களுக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

chennai - tirupati trains operation halts for 15 days vel
Author
First Published Sep 26, 2023, 9:33 AM IST

தென்னக ரயில்வே சார்பில் திங்கள் கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு தினமும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள தண்டவாள மேம்பாட்டுப் பணி காரணமாக செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12ம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 6.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில், பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் திருப்பதி விரைவு ரயில், மாலை 4.35 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12ம் தேதி வரை முழுவதுமா ரத்து செய்யப்படுகிறது.

கோவை என்மண் என் மக்கள் பயணத்தில் அதிமுக குறித்து வாய் திறக்காத அண்ணாமலை

இதே போன்று மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் கருடாத்திரி விரைவு ரயில், காலை 10.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் மற்றும் மாலை 6.05 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios