Asianet News TamilAsianet News Tamil

ஜூன் 20க்குள் இதை செய்ய வேண்டும்... அரசு பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவு...!

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட வலியுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டால் சான்றிதழ் நகலை சேகரித்து வைக்குமாறு கல்வி அலுவலர்கள் வட்டார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

chennai teachers should be vaccinated within june 20
Author
Chennai, First Published Jun 5, 2021, 5:18 PM IST

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தீவிரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் வரும் 20-ஆம் தேதிக்குள் அரசு பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்று சென்னை முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

chennai teachers should be vaccinated within june 20

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட வலியுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டால் சான்றிதழ் நகலை சேகரித்து வைக்குமாறு கல்வி அலுவலர்கள் வட்டார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் இடம் உரிய காரணத்தை ஆதாரத்துடன் பெற்று வைத்திருக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

chennai teachers should be vaccinated within june 20

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட உத்தரவு பிறப்பித்ததை அடுத்து  12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் செப்டம்பரில் தேர்வை நடத்துவது குறித்து பரிசீலனை செய்து தமிழக அரசு இறுதி முடிவை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தான் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios