சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி! நாளை போக்குவரத்து மாற்றம்! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டி நாளை சென்னையில் நடைபெறுவதால், போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Chennai T20 match: Traffic changes in Chennai tomorrow tvk

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுவதையோட்டி வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:  2025ம் ஆண்டுக்கான சர்வதேச ஆடவர் டி20 கிரிக்கெட்டின் 2வது போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியை காண அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருவார்கள் எதிர்பார்க்கப்படுவதால் போட்டி நாளில் மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதனை தொடர்புடைய சாலைகளில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம் விவரம்!

விக்டோரியா ஹாஸ்டல் சாலை:

விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை.

பெல்ஸ் சாலை:

* பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக இயக்கப்படும். பாரதி சாலையிலிருந்து பெல்ஸ் சாலை செல்ல அனுமதிக்கப்படும். 

* வாலாஜா சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை.

பாரதி சாலை:

ரத்னா கஃபேவிலிருந்து காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை X வாலாஜா சாலையில் திருப்பிவிடப்படும். பெல்ஸ் ரோட்டில் இருந்து கண்ணகி சிலை நோக்கி வாகனம் செல்ல அனுமதி இல்லை.

காமராஜர் சாலை (மெரினா கடற்கரை சாலை):

குடியரசு தின ஏற்பாட்டின் காரணமாக நேப்பியர் பாலத்தில் இருந்து கண்ணகி சிலை வரை சாலைகள் மூடப்படும். மேற்கண்ட சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இரவு 10 மணிக்கு பிறகு அனுமதி இல்லை.

வாகன நிறுத்தத்திற்கு அனுமதி வழங்கப்படாத வாகனங்கள்

அண்ணாசாலையில் இருந்து பின்வரும் இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும். கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மைதானம், MRTS சேப்பாக்கம் வளாகம், PWD மைதானம் சேப்பாக்கம், V. சுவாமி சிவானந்தம் சாலை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios