சென்னை தி.நகரில் பிரபல தொழிலதிபரான சேகர் ரெட்டி சொந்தமான அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தி.நகர் விஜயராகவா சாலையில் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான 5 அடுக்கு கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் 5-வது மாடியில் சேகர் ரெட்டியின்  முக்கியமான அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை 2016-ம் ஆண்டு, வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. 

இந்நிலையில், அந்த கட்டிடத்தின் 4-வது தளத்தில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். 

மேலும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமாக என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.