Asianet News TamilAsianet News Tamil

#BREAKING சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. மீண்டும் புறநகர் ரயில் சேவை.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

சென்னையில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

chennai suburban train service again... southern railway announcement
Author
Chennai, First Published Jun 24, 2021, 1:55 PM IST

சென்னையில் கொரோனா முழுஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டது. புறநகர் ரயில்களில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் உரிய அனுமதி கடிதம் வைத்திருந்தவர்கள் மட்டுமே பயணித்து வந்தனர்.

chennai suburban train service again... southern railway announcement

இந்நிலையில், நாளைமுதல் மீண்டும் சென்னை புறநகர் ரயில் சேவை தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் பயணிகள் எப்போது வேண்டுமானாலும் எந்த காரணத்திற்காவும் பயணம் செய்யலாம். ரிட்டர்ன் டிக்கெட் அவர்களுக்கு வழங்கப்படும். இதேபோன்று 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் பயணிக்கலாம்.

chennai suburban train service again... southern railway announcement

ஆண்கள் நான் பீக் ஹவர்சில் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால், அவர்களுக்கு ரிட்டர்ன் டிக்கெட் கிடையாது. காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை, இரவு 7 மணிமுதல் கடைசி ரயில் செல்லும்வரை ஆண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு பணியாளர்கள் புறநகர் சேவையை எப்போதும் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். தனியார் அலுவலக ஊழியர்கள் அனுமதி கடிதம் மற்றும் ஐடி கார்டு காண்பித்து டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். ரயில் நிலையங்களுக்கு வருபவர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் இல்லையென்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios