சென்னையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த இளம்பெண் மெர்சி இறுதிச் சடங்கின் போது தந்தை செய்த காரியத்தால் அங்கிருந்த அனைவரும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.  

ஆவடியை அடுத்த பட்டாபிராம், நவஜீவன் நகரைச் சேர்ந்தவர் தாஸ். இவருடைய மகன் அப்பு(வயது 24). பட்டாபிராம் காந்திநகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மகள் மெர்சி(22). உறவினர்களான இவர்கள் இருவரும் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள வெவ்வேறு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அப்புவுக்கும், மெர்சிக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர். செப்டம்பர் மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஜனவரி மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதனிடையே, இருவரும் உறவினர் என்பதால் திருமணத்திற்கு முன்னர் அடிக்கடி வெளியில் செல்லுவதை வழக்காக கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 4-ம் தேதி முத்தாபுதுபேட்டை கண்டிகை பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்குள் இறங்கி செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது, நீச்சல் தெரியாதநிலையில், பிரபல சீரியல் ராஜராணியில் வருவதுபோன்று அங்கிருந்த கிணற்றின் படிக்கட்டில் இறங்கி, கால்நினைக்க மெர்சி நினைத்து, அப்புவை அழைத்துள்ளார். அவர் மறுத்தபோதும், மெர்சியின் ஆசைக்காக கிணற்றில் இறங்கினர். அப்போதுதான் படிக்கட்டில் இருந்து மெர்சி தவறிவிழ, அவரை பிடிக்கப் போய் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கினர். இதில் மெர்சி உயிரிழந்தார். அந்த நேரத்தில் விவசாயி ஒருவரின் புத்திசாலித்தனமான முயற்சியால் அப்பு மட்டும் காப்பாற்றப்பட்டார். 

இதையும் படிங்க;- செல்ஃபியால் உயிரிழக்கவில்லை... காதலி மரணத்தை தாங்க முடியால் கதறிய படி பரபரப்பு தகவலை வெளியிட்ட காதலன்...

இந்நிலையில், தேவாலயத்தில் உள்ள பாடக் குழுவில் மெர்சி அழகாக பாடுவார் என தெரியவந்துள்ளது. இதனால் தேவலாயத்திற்கு வரும் அனைவருக்கும் மெர்சியை தெரியும். இதனால், மெர்சியின் இறுதி சடங்கில் அனைவரும் பங்கேற்றனர். 

அப்போது மெர்சியின்  தந்தை, 'என் அன்புமகளை, பரலோக ராஜ்ஜியத்தில் மனமகிழ்ச்சியாக வைத்திருப்பார் என்று பிரார்த்தனை செய்தார். அதைத் தொடர்ந்து மெர்சிக்கு ரொம்பப் பிடித்த கிறிஸ்தவப் பாடல்களை வேதனையுடன், கண்ணீர்மல்க பாடினார். அதைக்கேட்ட அனைவரும் கண்ணீரோடு அந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.