Asianet News TamilAsianet News Tamil

அட ! இது நம்ம சிங்கார சென்னைங்க !! .. மெட்ராஸ் டே சிறப்பம்சங்கள் ..

தமிழ்நாட்டின் தலைநகராக இருந்துவரும் சென்னைக்கு இன்று 380 வது பிறந்தநாள் . இதனால் சென்னை முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது .
 

chennai's 380 birthday celeberations
Author
Tamil Nadu, First Published Aug 22, 2019, 12:10 PM IST

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிழக்கிந்திய கம்பெனி  இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள சிறிய நிலப்பகுதியை வாங்கி சென்னையை உருவாக்கியது . 1963 ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ம் தேதி தாமஸ் வெங்கடப நாயக்கர் என்பவரிடம் இருந்து வாங்கி கையெழுத்தானது . அந்த நாளை நினைவு கூறும் வகையில் தான் " சென்னை தினம் " எனப்படும் மெட்ராஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது .

chennai's 380 birthday celeberations

இந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் கடந்த 2004 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது . வருடம் முழுவதும் இந்த நாளில் சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு படு ஜோராக நடத்தப்பட்டு வருகிறது .

இந்த வருடம் ஆகஸ்ட் 18 இல் இருந்து 25 ம் தேதி வரை மெட்ராஸ் டே கொண்டாடப்பட்டு கொண்டு இருக்கிறது .சென்னையின் முக்கிய இடங்களான மெரினா பீச் , பெசன்ட் நகர் பீச் ,சென்னை மால்கள் , தீம் பார்க் , முக்கிய கோவில்கள் போன்ற இடங்களில் சிறப்பு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்ய பட்டிருக்கிறது .

chennai's 380 birthday celeberations

பத்திரிகையாளர் சசி நாயர் , மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சென்ட் , மெட்ராஸ் ம்யூஸிக்ஸின் ஆசிரியர் முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியது தான் சென்னை தினம் . 2004 ம் ஆண்டு சில கருப்பு வெள்ளை படங்களுடன் தொடங்கிய இந்த திருவிழா , தற்போது புகைப்பட கண்காட்சி , மராத்தான் ஓட்டம் , நடன திருவிழா , உணவு திருவிழா என வளர்ச்சியடைந்து சென்னைவாசிகளால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது ..

Follow Us:
Download App:
  • android
  • ios