சென்னை அண்ணா நகரில் ரவுடி சின்ன ராபர்ட் மூகமூடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை.
சென்னை அண்ணா நகரில் உள்ள அன்னை சத்யா நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் எட்வின் - பூங்கொடி தம்பதி. இவர்களுக்கு சின்ன ராபர்ட், ஜோசப், மோசஸ் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று பேருமே அப்பகுதியில் ரவுடிகளாக வலம் வந்துள்ளனர். A கேட்டகிரி ரவுடியான சின்ன ராபர்ட் திருநங்கை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு வாடகை வீட்டில் வசித்துள்ளார். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு அன்னை சத்யா நகர் முதல் தெருவில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த சின்ன ராபர்டை இருசக்கர வாகனத்தில் மூகமுடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பித்தனர்.
இதையும் படிங்க: அலறிய சென்னை மக்கள்! நடுரோட்டில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! அடுத்த சில நிமிடத்தில் மற்றொரு பயங்கரம்!
இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சின்ன ராபர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த 2019ம் ஆண்டு ராபர்ட்டின் கூட்டாளி கோகுல் என்பவரை முன்விரோதம் காரணமாக அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி லோகு என்பவர் கொலை செய்துள்ளார். இதன்காரணமாக லோகுக்கும் ராபர்ட்டிற்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதில் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: 100 மீட்டரில் போலீஸ் ஸ்டேசன்! பேருந்தில் வைத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்! நடந்தது என்ன?
ஆனால் அந்த கும்பல் முந்திக்கொண்டு சின்ன ராபர்டை படுகொலை செய்தது. மேலும் இந்த கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் அந்த கொலை கும்பலானது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராபர்ட்டை கொலை செய்தது குறித்து ஒரு பதிவை வெளியிட்டு போட்டோவையும் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
