சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், சென்னை போரூரை சேர்ந்த சம்பத் என்பவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர்  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தான் சிகிச்சை பெற்று வந்த 7-வது மாடியில் புடவையால் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஏற்கெனவே பெருங்குடல் புற்றுநோய் இருந்த நிலையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தம் காரணமாக சம்பத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.