சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் முறையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றும் மட்டும் தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,927 பேரில் சென்னையில் மட்டும் 1,392 பேர் உள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 25,937ஆக அதிகரித்துள்ளது. இதில் 12,507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 258 பேர் உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,405ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டையில் 3,405 பேரும், தேனாம்பேட்டையில் 3,069 பேரும், கோடம்பாக்கத்தில் 2,805 பேருக்கும், திரு.வி.க.நகரில் 2,456 பேருக்கும், அண்ணாநகரில் 2,362 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், சென்னையிலிருந்து வெளியூர் செல்வோருக்கு இ-பாஸ் அனுமதி வழங்குவதை நிறுவத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. திருள்ளூர் மாவட்டங்களிலிருந்து செல்வோருக்கும் இ-பாஸ் தர வேண்டாம் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.