சென்னையில் அதிர்ச்சி.. பிரபல தனியார் மருத்துவமனையின் 9-வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை..!
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நீலேஷ்குமார் ஷர்மா (31). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 23ம் தேதியன்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார்தனியார் மருத்துவமனையின் 9வது மாடியில் இருந்து வாலிபர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நீலேஷ்குமார் ஷர்மா (31). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 23ம் தேதியன்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நல பிரச்சனையால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் திடீரென 9வது மாடியில் இருந்து நீலேஷ்குமார் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் உடல் சிதறி நீலேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நீலேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.