Asianet News TamilAsianet News Tamil

மக்களின் வரவேற்பை பெற்ற மெட்ரோ ரயில்... ஒரே நாளில் 1.37 லட்சம் பேர் பயணம்..!

சாலை போக்குவரத்தும், மின்சார ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. சென்ட்ரல், கோயம்பேடு, விமான நிலையம், கிண்டி நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 37 ஆயிரத்து 820 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதுவே, அக்டோபர் மாதத்தில் அதிபட்ச பயணிகள் பயணம் செய்த நாள் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Chennai Metro, with ridership touching 1.37 lakh
Author
Tamil Nadu, First Published Oct 13, 2019, 2:55 PM IST

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 11-ம் தேதி மட்டும் 1.37 லட்சம் பேர் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் பயணமாக சீன அதிபர் ஜின்பிங் நேற்று முன்தினம் சென்னை வந்தார். பிரதமர் கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கிய நிலையில், சீன அதிபர், சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இதனால், இவர்களின் வருகையையொட்டி சாலை மார்க்கமான போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால், சென்னை மற்றும் மாமல்லபுரம் இரண்டும் போலீசாரின் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. 

Chennai Metro, with ridership touching 1.37 lakh

சீன அதிபர் சென்னை வந்த அன்று ரயில்களும், சாலை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பல இடங்களில் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர். ஆனால், மெட்ரோ ரயில் சேவையில் எந்தவித தடையும் ஏற்படவில்லை. வழக்கமான இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டது.

Chennai Metro, with ridership touching 1.37 lakh

மேலும், சாலை போக்குவரத்தும், மின்சார ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. சென்ட்ரல், கோயம்பேடு, விமான நிலையம், கிண்டி நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 37 ஆயிரத்து 820 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதுவே, அக்டோபர் மாதத்தில் அதிபட்ச பயணிகள் பயணம் செய்த நாள் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios