வெப்பசலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில்  லேசானது முதல் மிதமான மழைக்கு வாயப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், 

திருவள்ளுர், கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 செ.மீ. மழையும், காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. 

அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையை பொறுத்தவரை இயல்பாக பதிவாக வேண்டிய அளவு 31 செ.மீ ஆனால் 28 செ.மீ பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 9 விழுக்காடு குறைவு. அக்டோபர் 1 முதல் இன்று வரை  சென்னையை பொறுத்தவரை 51 செ.மீ  கிடைக்க வேண்டிய மழை அளவு, இதுவரை 30 செ.மீ பதிவாகி உள்ளது, இது வழக்கமான அளவை விட 41 விழுக்காடு குறைவாக உள்ளது.வருகிற 28, 29 தேதிகளில் தென்தமிழகத்தில் மழைக்கு வாயப்புள்ளது, வட தமிழகத்திற்கு அதிகளவு மழைக்கு வாயப்பில்லை