Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவலா ?? மூடப்பட்ட மெரினா கலங்கரை விளக்கம் ..

சென்னை மெரினாவில் இருக்கும் கலங்கரை விளக்கம் இன்று மூடப்பட்டுள்ளது . இதற்கு தமிழகத்தில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது .

chennai light house has been closed today
Author
Tamil Nadu, First Published Aug 27, 2019, 1:15 PM IST

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 6  பேர் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாகவும் கோவையில் அவர்கள் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் உளவுத்துறைக்கு தகவல் வந்திருக்கிறது . இதையடுத்து தமிழக அரசை உளவுத்துறை எச்சரித்திருந்தது .

chennai light house has been closed today

உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது . குறிப்பாக கோவையில் தாக்குதல் நடத்த கூடும் என்று தகவல் வந்திருப்பதால் 2000 போலீசாருக்கு மேல் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர் . சோதனை சாவடிகள் முழுவதும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன . பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது .

இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கம் இன்று மூடப்பட்டுள்ளது . ஆகஸ்ட் 27 , 2019 விடுமுறை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . மேலும் சென்னை சென்ட்ரல் , எழும்பூர் ரயில் நிலையங்கள் , கோயம்பேடு பஸ் நிலையம் , மீனம்பாக்கம் விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

chennai light house has been closed today

மகாபலிபுரத்தில் இருக்கும் கலங்கரை விளக்கமும் மூடப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்து  துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது . பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சுற்றலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .   

Follow Us:
Download App:
  • android
  • ios