ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்தை தொடர்ந்து நீதி கேட்டு போராட்டம் நடந்து வரும் நிலையில் மௌனமாக இருந்து வரும் ஐஐடி நிர்வாகம்,   தங்களது பேராசிரியர்கள் உயர்தரமானவர்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளது.  ஐஐடி மெட்ராஸில் மானுட கலையியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி பாத்திமா லத்தீப்,   நவம்பர் 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   மதரீதியான பாரபட்சம்தான்  மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன அரசியல் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள்,  கடந்த இரு நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். 

பலரும்  பாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டு Justice for fathima என  பதிவிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  எல்லாவிதத்திலும் விசாரணைக்காக ஐஐடி நிர்வாகம்  ஒத்துழைத்து வருகிறது. அதே நேரத்தில்,  நிர்வாகத்தைப் பற்றி சமூக வலைதளங்களில்,  ஊடகங்களில்,  வெளியாகும் கருத்துக்கள் படிக்கும் மாணவர்கள்,  மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு,  மனுஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.  எங்கள்  நிர்வாகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர்தர மாணவர்கள்.  நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள். மறைந்த மாணவிக்காக தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகிறோம்.  

எங்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் உடல் நலம்,  மற்றும் மன நலனை உறுதிப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.  முழுமையான விசாரணை முடியும் வரை தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்,  ஐஐடி நிர்வாகம் இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க சென்னை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.