இதுக்கு ஒரு முடிவே இல்லையா? ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணம் இழப்பு.. ஓட்டல் ஊழியர் விபரீத முடிவு.!
சென்னை மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காந்தி ராஜன் (25). வேளச்சேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். தொடக்கத்தில், இந்த ரம்மி விளையாட்டு மூலம் பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.2 லட்சத்தை இழந்த உணவக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம்
கடந்த அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காந்தி ராஜன் (25). வேளச்சேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். தொடக்கத்தில், இந்த ரம்மி விளையாட்டு மூலம் பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
கடன் தொல்லை
இதில், அதிக வருமானம் வந்ததால் காந்தி ராஜன் தொடர்ந்து நீண்ட நேரம் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். சில நாட்களில், அடுத்தடுத்து தனது பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார். இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டும், என்ற எண்ணத்தில் மீண்டும் தொடர்ந்து விளையாடி உள்ளார். அதன் மூலம் ரூ.2 லட்சம் வரை இழந்துள்ளார். மேலும், கடன் வாங்கியும் பணத்தை இழந்துள்ளனர். கடன் கொடுத்த நபர்களும் திரும்ப கேட்டு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
தற்கொலை
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காந்தி ராஜன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக குமரன் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காந்திராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காந்தி ராஜன் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.