Asianet News TamilAsianet News Tamil

கோவில் நிலத்தில் இதைச் செய்ய எவருக்கும் உரிமை இல்லை... உயர்நீதிமன்றம் அதிரடி... !

கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க வேறு எவருக்கும் உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Chennai high court says no one have a right to collect parking charges at temple land
Author
Chennai, First Published Jul 16, 2021, 3:09 PM IST

திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு, கிராம பஞ்சாயத்து தலைவர், கட்டணம் வசூலித்து வருவதாக கூறி, ராமு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Chennai high court says no one have a right to collect parking charges at temple land

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, சேஷபுரீஸ்வரர் கோவில் இந்துசமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கோவில் நிலத்தில் வாகனங்கள் நிறுத்த, பஞ்சாயத்து தலைவர் கட்டணம் வசூலிப்பதற்கு எந்த அனுமதியும் கிடையாது எனவும், கோவில் நிலத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்க எவருக்கும் உரிமையில்லை என உத்தரவிட்டது.

Chennai high court says no one have a right to collect parking charges at temple land

மேலும், இதுவரை கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை குறித்த கணக்குகளை தாக்கல் செய்ய பஞ்சாயத்து தலைவருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வசூலிக்கப்பட்ட தொகையை அறநிலையத் துறை வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios