Asianet News TamilAsianet News Tamil

நீதிபதிகள், வழக்கறிஞர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க தேவையில்லை... உயர் நீதிமன்றம் அதிரடி!

நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதால், அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Chennai high court says no need to announce lawyers and judges are frontline workers
Author
Chennai, First Published Jul 9, 2021, 12:43 PM IST

நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதால், அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Chennai high court says no need to announce lawyers and judges are frontline workers

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தற்போது தடுப்பூசி மருந்துகள் சப்ளை குறைந்த அளவில் உள்ளதாகவும், தடுப்பூசி மருந்துகளை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டது.

Chennai high court says no need to announce lawyers and judges are frontline workers

மேலும், நீதிமன்ற வளாகங்களில் தடுப்பூசி முகாம்களை நடத்த மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்திலும், பார் கவுன்சிலிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், இதற்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டனர்.

Chennai high court says no need to announce lawyers and judges are frontline workers

மருத்துவ ரீதியாக தேவைப்படுவோருக்கு தடுப்பூசி செலுத்துவது என்பது தவிர்க்க முடியாதது என்பதால், நீதிபதிகள், வழக்கறிஞர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.                   
 
Follow Us:
Download App:
  • android
  • ios