Asianet News TamilAsianet News Tamil

ஜாமீன் கேட்ட தனுஜா... பார் கவுன்சிலை கேள்விகளால் துளைத்தெடுத்த ஐகோர்ட்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்!

கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். 

chennai high court questioned bar council for lawyers mistake
Author
Chennai, First Published Jun 17, 2021, 3:36 PM IST

தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தானாக முன் வந்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை சேத்துபட்டு சிக்னலில்  காவலர்களுடன், வழக்கறிஞர் தனுஜா ராஜன்,  வாக்குவாதத்தில் ஈடுபட்ட  சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து தலைமை காவலர் ரஜித் குமார் அளித்த புகாரில் சேத்துப்பட்டு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் இருவர் மீது வழக்குபதிவு செய்தனர். 

chennai high court questioned bar council for lawyers mistake


இந்நிலையில், தாய் தனுஜா, மகள் ப்ரீத்தி இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். 

chennai high court questioned bar council for lawyers mistake

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பார் கவுன்சில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, புகார்கள் பெறாமலேயே  தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியுமா என பார் கவுன்சிலுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார் .

chennai high court questioned bar council for lawyers mistake

மேலும், தவறு செய்யும் வழக்கறிஞர்களை நீதிமன்றம் காப்பாற்றி விடும் என்று மக்கள் நினைப்பதாக வேதனை தெரிவித்தார். வழக்கறிஞர் தொழில் ஒரு உன்னதமான தொழில் என்றும் , வழக்கறிஞர்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் நாளை விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios