Asianet News TamilAsianet News Tamil

மருத்துவ படிப்புகளில் 69 சதவீத இட ஒதுக்கீடு... மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு...!

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 69 சதவீத இடஒதுக்கீட்டை 2021-22ம் கல்வியாண்டில்  அமல்படுத்துவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்கும்படி   மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

Chennai high court 69 percentage reservation case
Author
Chennai, First Published Jul 19, 2021, 12:37 PM IST

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி திமுக, உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-22ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த  வேண்டும் என 2020 ஜூலையில் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பரிந்துரை அளித்தும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

Chennai high court 69 percentage reservation case

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், 2021-22ம் கல்வியாண்டில் இடஒதுக்கீடு உத்தரவு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு உறுதியளித்தும், அதை அமல்படுத்தவில்லை எனவும், இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் வாதிட்டார்.

Chennai high court 69 percentage reservation case

மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர், மனுவில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு விட்டு, தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு கோருவதாகவும், இடஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Chennai high court 69 percentage reservation case

மேலும், எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் மத்திய அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-22ம் கல்வியாண்டில் எப்படி அமல்படுத்தபடும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைபாடு என்ன என்பது குறித்து அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios