சென்னையை புரட்டி எடுக்கும் கனமழை.. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நிலவரம் என்ன?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று தொடங்கிய மழை விடிய விடிய காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 

Chennai Heavy Rain...What is the status of lakes including Chembarambakkam?

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1146 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று தொடங்கிய மழை விடிய விடிய காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக பூவிருந்தவல்லி, மாங்காடு, குன்றத்தூர், செம்பரம்பாக்கம், போரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. இதன் காரணமாக நீர் ஆதாரமாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க;- 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! 4 பேர் பலி!100 பேர் மருத்துவமனையில் அனுமதி! விபத்து நடந்தது எப்படி?

Chennai Heavy Rain...What is the status of lakes including Chembarambakkam?

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவான 3,645 மில்லியன் கன அடியில் 2.403 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 1,146 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியிலிருந்து 174 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்ட  24 அடியாக உள்ள நிலையில், தற்போது  19.17 அடியை எட்டியுள்ளது.  

இதையும் படிங்க;-  உங்க கோஷ்டி மோதலுக்கு கலெக்டரை பிடித்து கீழே தள்ளுவீங்களா? திராவிட மாடல் வெளியே சொல்லாதீங்க! எகிறும் சசிகலா.!

Chennai Heavy Rain...What is the status of lakes including Chembarambakkam?

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3300 மில்லியன் கன அடியில் 2,178 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரத்து 258 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு, ஆன 1,081 மில்லியன் கன அடியில் 428 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு நீர் வரத்து 12 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க;-   Heavy Rain Alert in Tamil Nadu: இந்த 13 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுதாம் மழை.. சென்னை வானிலை மையம்..!

Chennai Heavy Rain...What is the status of lakes including Chembarambakkam?

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3,231 மில்லியன் கனஅடியில் தற்போது 1,257 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 330 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios