சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அதன் தாக்கம் சற்றும் குறையாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 8,731 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 118-ஆக உள்ளது.

இந்நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட 50 வயதுடைய நபர் தொற்று உறுதி செய்யப்பட்டு நேற்று மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.