Asianet News TamilAsianet News Tamil

Chennai Flood: மாமல்லபுரம் -ஸ்ரீஹரிகோட்டா அருகே கரை கடக்கும்.. தொடரும் மழையால் பீதியில் சென்னைவாசிகள்.!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் ஏற்கெனவே நிரம்பிவிட்டன. இந்நிலையில் அதிக மழை பெய்தால், 2015 போல பாதிப்பு வருமோ என்ற பீதியில் சென்னைவாசிகள் உள்ளனர். 

Chennai Flood: Mamallapuram -Sriharikotta near the border .. Chennai residents in panic due to continuous rain.!
Author
Chennai, First Published Nov 10, 2021, 7:08 PM IST

சென்னையை மழையை அச்சுறுத்தி வரும் நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் - ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், சென்னையில் கடந்த 6-ஆம் தேதி இரவு முதல் 7-ஆம் தேதி காலை வரை விடாமல் கனமழை பெய்தது. 23 செ.மீ. மழை பெய்ததாதால், சென்னை மா நகரமே வெள்ளக் காடானது. தாழ்வானப் பகுதிகளில் சூழந்த வெள்ளம், இன்னும் வடியாமல் மக்கள் அவதியில் உள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்குக் கரையைக் கடக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில், வட தமிழகத்துக்கும் தெற்கு ஆந்திராவுக்கும் இடையே கரைடையக் கடக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிந்திருந்தது. இந்நிலையில் மாமல்லபுரத்துக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.Chennai Flood: Mamallapuram -Sriharikotta near the border .. Chennai residents in panic due to continuous rain.!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள மாமல்லபுரம் -ஸ்ரீஹரிகோட்டா இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க உள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.Chennai Flood: Mamallapuram -Sriharikotta near the border .. Chennai residents in panic due to continuous rain.!

சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் 20 - 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. கடந்த 6-ஆம் தேதி பெய்த மழையிலிருந்தே சென்னை மாநகரின் தாழ்வான பகுதிகள் மீளவில்லை. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் ஏற்கெனவே நிரம்பிவிட்டன. இந்நிலையில் அதிக மழை பெய்தால், 2015 போல பாதிப்பு வருமோ என்ற பீதியில் சென்னைவாசிகள் உள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios