கணவர்  திலகர் வீட்டில் இல்லாதபோது மாலாவின் வீட்டுக்கு சென்று அடிக்கடி மாலாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் நாராயணன்.   மனைவி மாலாவின் நடவடிக்கையில் திலகருக்கு சந்தேகம் ஏற்பட்டது.  இதனால் மனைவியை கண்காணிக்க திட்டமிட்ட நாராயணன்,  மாலாவுக்கு தெரியாமல் ரகசியமாக கேமரா பொருத்தி உள்ளார். இந்நிலையில்  அடிக்கடி நாராயணன் தனது வீட்டிற்கு வந்து செல்வதை உறுதி செய்தார் திலகர். இதனையடுத்து கடந்த வாரம் மாலாவின் வீட்டிற்கு வழக்கம்போல் வந்த நாராயணனை கையும் களவுமாக பிடிக்க கணவர் திலகர் அவரது உறவினர்களுடன் தயாரானார்.  எதிர்பார்த்தபடி வழக்கம்போல வீட்டுக்கு வந்த நாராயணன் மாலாவுடன் உல்லாசத்தில்ஈடுபட்டார். 

அந்நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்த  திலகர் கதவைத் திறக்கும்படி  கூறினார்,  இதில் பதற்றமடைந்த கள்ளக்காதலர்கள் நிர்வாண கோலத்தில் ஆளுக்கொரு பக்கம் ஓடினர்.  நிர்வாண கோலத்தில் மாடிக்கு ஓடிய நாராயணன் அங்கிருந்து தப்ப முடியாது என்பதால்  மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அதிக உயரத்தில் இருந்து குதித்ததில் கீழே விழுந்து படுகாயம் அடைந்து  ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே நாராயணன் உயிரிழந்தார்.  பிறகு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த ஆர்கே நகர் போலீசார்,  நாராயண உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். 

திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொண்டதால் மாலாவின் மீது கே.கே நகர் காவல் நிலையத்தில் கணவர் புகார் கொடுத்துள்ளார்.  கள்ளக்காதல் விவகாரத்தால் கள்ளக்காதலன் மாடியில் இருந்து குதித்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஏற்கனவே திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று நீதி மன்றம் தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடதக்கது.