சென்னை மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. ரத்தாகும் முக்கிய ரயில்கள்... செப்டம்பர் 1 முதல் அமல்!!

சென்னையில் மின்சார ரயில் செல்லும் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் செப்டம்பர் 1 முதல் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன.

chennai electric trains are cancelled from september 1 to 8

போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் சென்னை நகரில் அதை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்டது தான் மின்சார ரயில் சேவை திட்டம். தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்த ரயில்சேவையில் கட்டணம், பேருந்துகளை விட மிக குறைவு என்பதால் பொதுமக்கள் அதிகளவில் இதை பயன்படுத்தி வருகின்றனர் .

chennai electric trains are cancelled from september 1 to 8

இந்த நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக ரயில் பயண நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. அதன்படி சென்னை எழும்பூர் முதல் கடற்கரை வரை செல்லும் ரயில் தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதன் காரணமாக  காலை 11 .45  முதல் மாலை 3 .15  வரை 4 மணி நேரத்திற்கு தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை செல்லும் 29 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் செல்லும் 15 மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்தாகி இருக்கிறது. இந்த அறிவுப்பு செப்டம்பர் 1 முதல் 8 ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

chennai electric trains are cancelled from september 1 to 8

மேலும் ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களை ஈடுகட்டும் வகையில் 14 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios