தமிழகத்தை பொறுத்தவரை மற்ற பண்டிகைகளை விட, தீபாவளி - பொங்கல் போன்ற பண்டிகையை பலர் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட, அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். 

எனவே இது போன்ற நாட்களில், பேருந்துகளில் அதிக கூட்டம் காணப்படும். மக்கள் கூட்டத்தை கட்டு படுத்தவும், ஒவ்வொரு ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதோடு, பேருந்து எந்த இடத்தில் இருந்து செல்லவுள்ளது என்பதை போக்குவரத்துக்கு கழகம் வருடம் தோறும் வரையறை செய்து வருகிறது.

அதன் படி, அக்டோபர் 27 ஆம் தேதி, தீபாவளி திருநாள் வருவதை ஒட்டி, பயணிகள் அவரவர் ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் எந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து செல்கிறது என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதன் விவரங்கள் இதோ...