சென்னையில் 7 வயது சிறுவன் வாயில் முறையற்ற வளர்ந்திருந்த 526 பற்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். 

சென்னை தனியார் கம்பெனியில் சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவாக பணிபுரிபவர் பிரபுதாஸ். இவரது 7 வயது மகன் ரவீந்திரநாத்துக்கு சிறுவயது முதலே வலது கண்ணத்தில் வீக்கம் இருந்துள்ளது. இதையடுத்து ரவீந்திரநாத்துக்கு 3 வயது இருக்கும்போது, அவனது பெற்றோர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் காண்பித்துள்ளனர்.

ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் சாதாரணமாக பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், நாளாக, வீக்கம் வளர்ந்து கொண்டே போனதால், பதறிபோன ரவீந்திரநாத் பெற்றோர் சவிதா தனியார் பல் மருத்துவமனையில் தங்களது மகனை காண்பித்துள்ளனர்.

அப்போது, எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, சிறுவனின் கீழ் தாடையில், கண்ணுக்கு தெரியாத அளவில் பற்கள் குவியலாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அவனது வாயிலிருந்த 526 பற்களையும் அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.