Asianet News TamilAsianet News Tamil

#BREAKING ‘வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையும்’... சென்னைவாசிகளை எச்சரித்த மாநகராட்சி...!

கொரோனா 2ம் அலையை பொருட்படுத்தாமல் மாஸ் அணியாமல் பொது இடங்களில் சுற்றுவோரிடம் போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர். 

Chennai Covid Violation fine collection details from april 1 to 13
Author
Chennai, First Published Apr 14, 2021, 4:54 PM IST

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 18 ஆயிரத்து 673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4 ஆயிரத்து 337 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 2 லட்சத்து 69 ஆயிரத்து 614 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2 லட்சத்து 46 ஆயிரத்து 604 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வருகின்றனர். ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த தெரு முழுவதையும் மாநகராட்சி நிர்வாகம் அடைந்து வருகிறது. தற்போது சென்னையில் அப்படி கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

Chennai Covid Violation fine collection details from april 1 to 13

எனவே சென்னையில் கடுமையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.200ம், பொது இடங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், எச்சில் துப்பினாலும் ரூ.500ம் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

Chennai Covid Violation fine collection details from april 1 to 13

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அப்படி தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுவோரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. 

Chennai Covid Violation fine collection details from april 1 to 13

 

இதையும் படிங்க: துரைமுருகன் வீடு திரும்பிய நேரத்தில் இப்படியா?... ஸ்டாலின், உதயநிதிக்கு ஒரே நேரத்தில் கிடைத்த அதிர்ச்சி செய்தி

கொரோனா 2ம் அலையை பொருட்படுத்தாமல் மாஸ் அணியாமல் பொது இடங்களில் சுற்றுவோரிடம் போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர். அதன்படி சென்னையில் மட்டும் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை கொரோனா விதிகளை மீறியதாக 1,1970 சம்பவங்கள் மூலமாக இதுவரை 26 லட்சத்து 44 ஆயிரத்து 800 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீறப்படுவது குறித்து தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும், அபராதத்தை தவிர்க்க பொதுமக்கள் விதிகளை கடைப்பிடித்து , ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios