Asianet News TamilAsianet News Tamil

கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால்... சென்னை மாநகராட்சி எச்சரிக்கை... புகார் எண் இதோ...!

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. 

Chennai corporation Commissioner new announcement
Author
Chennai, First Published May 18, 2021, 6:27 PM IST

சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. என்ன தான் மருத்துவமனைகள், சித்தா சிகிச்சை மையங்கள் என அமைக்கப்பட்டாலும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தொற்று குறைவாக உள்ளவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காக உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியே வருவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு கொரோனா பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Chennai corporation Commissioner new announcement

 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. இவற்றின் ஒருபகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சியின் 15மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டலத்திற்கு இரண்டு எண்ணிக்கையில் மண்டல அமலாக்கக் குழுநியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானதுநாள்தோறும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறுபவர்களிடமிருந்து அபராதத் தொகையினையும், விதிகளை மீறி நடத்தப்படும். கடைகளை மூடிசீல் வைத்து, அதன் உரிமையாளர்களிடமிருந்து அவராதத் தொகையினையும் வருவித்து வருகின்றன.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனையின்படி தொற்று மதிப்பு குறைவாக உள்ள நபர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள். மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியால் 2000க்கும் மேற்பட்ட முன்கள தன்னார்வளர்கள் (Focus Valunteers) பணியமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளைவிட்டு வெளியே வராமல் இருப்பதற்காக இந்தகைய ஏற்பாடுகளை பெருநகர் சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

Chennai corporation Commissioner new announcement

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலன் கருதி அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களில் ஒரு சிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளை விட்டு வெளியே வருவதாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது. இந்தகைய செயலினால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் மருத்துவரால் அறிவுறுத்தப்பட்ட நாட்கள் வரை வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.

Chennai corporation Commissioner new announcement

இதனை மீறி விடுகளை விட்டு வெளியில் வருபவர்களிடமிருந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அமலாக்க பிரிவின் மூலம் முதல் தடவையாக ரூ2000/- அபராதமாக வதலிக்கவும். இரண்டாவது தடவை மீண்டும் வீடுகளை விட்டு வெளியில் வருவது கண்டறியப்பட்டால் அவர்களை பெருநகர சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையங்களில் COVID CARE CENTRE) தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீடுகளை விட்டு வெளியே வரும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் குறித்த விவரங்களை அருகாமையில் வசிப்பவர்கள் மற்றும் ஏனையோர் 044-25384520 என்ற தொலைபேசி எண்ணில் புகாராக அளிக்கலாம். எனவே, கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்கும்படி முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திருககன்தீப் சிங் பேடி, இ.ஆ., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்

Follow Us:
Download App:
  • android
  • ios