சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காத வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வே நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் நாளுக்கு நாள் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை 44,661 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 435 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதில், அதிகபட்சமாக சென்னையில் 31,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,667 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதையடுத்து மருத்துவமனைகளில் 2000க்கும் மேற்பட்டோரும், தனிமைப்படுத்தும் மையங்களில் 4,000க்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்டோர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதில், 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,216 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தண்டையார்பேட்டையில் 4,082,  தேனாம்பேட்டையில் 3,844,  கோடம்பாக்கத்தில் 3,409, அண்ணாநகரில் 3, ,150,  திரு.வி.க.நகரில் 2,922 , அடையாறில் 1,809, வளசரவாக்கத்தில் 1,395, திருவொற்றியூரில் 1,171, அம்பத்தூரில் 1,105, மாதவரத்தில் 854, ஆலந்தூரில் 624, பெருங்குடியில் 594, சோழிங்கநல்லூரில் 586, மணலியில் 448 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.