Asianet News TamilAsianet News Tamil

தடுமாறும் தலைநகரம்... சென்னையில் கொரோனாவுக்கு மருத்துவர் உட்பட ஒரே நாளில் 36 பேர் உயிரிழப்பு..!

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 36  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

chennai corona affect...people die in one day including doctor..!
Author
Chennai, First Published Jun 25, 2020, 6:17 PM IST

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 36  பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 45,814 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 668 பேர் உயிரிழந்துள்ளனர்.

chennai corona affect...people die in one day including doctor..!

இந்நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 36  பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். ஓமந்தூதாரர் அரசு மருத்துவமனையில் 10 பேரும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 பேர் உள்பட 36 பேர் சென்னையில் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழந்தவர்களில் மருத்துவர் ஒருவரும் அடங்குவர். அதேபோல், மதுரையில் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். 

chennai corona affect...people die in one day including doctor..!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும் அதிகரித்து வருவது பொதுமக்களின் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios