Asianet News TamilAsianet News Tamil

மழை முன்னெச்சரிக்கை… தினம், தினம் கள ஆய்வு நடத்தி மாஸ் காட்டு ஸ்டாலின்… அச்சத்தில் அதிகாரிகள்…!

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

Chennai CM Stalin review
Author
Chennai, First Published Sep 28, 2021, 6:12 PM IST

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே சென்னையில் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மழை நீரை வெளியேற்றும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை முதலமைச்சர் தினம், தினம் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்வதால் அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

Chennai CM Stalin review

வடசென்னையில் மட்டும் மழைநீரை வெளியேற்றும் கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் ஏழு இடங்களில் நடைபெற்று வருகின்றன. அவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆவ்யு மேற்கொண்டார். புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வடகரை, வடபெரும்பாக்கம் வழியாக சென்று எண்ணூர் முகத்துவாரம் மூலம் கடலில் கலக்கிறது. இந்த நீர் வழித்தடத்தை சீர் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Chennai CM Stalin review

ரூ.17 லட்சம் ரூபாய் செலவில் ராட்சத இயந்திரங்கள் மூலம் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு வ்ருகின்றன. இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மற்றும் பொதுபணி துறை அதிகாரிகளிடம் பணிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர் சேகர்பாபு, மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் உடனிருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios