சென்னையில் தடையை மீறி பைக் ரேஸ்! 242 பைக்குகளைத் தூக்கிய போலீசார்!

Chennai illegal bike race: Chennai illegal bike race: புத்தாண்டை முன்னிட்டு தடையை மீறி பைக் ரேஸ் நடத்தியதால் 400 க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Chennai City Traffic Police seized 242 vehicles during illegal bike races sgb

2025 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக சட்டவிரோத பைக் ரேஸ்கள் நடத்தக் கூடாது என்று மாநகர போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் தடையை மீறி ரேஸ் நடத்தியதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் ஆகியுள்ளன.

புத்தாண்டு தினத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். செவ்வாய் இரவு முதலே 425 இடங்களில் போலீசார் வாகனங்களை சோதனையிட்டு வந்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் என்கிற பெயரில் பைக் வீலிங், பைக் ரேஸ் ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என்றும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் பைக் ரேஸ் மற்றும் வீலிங் செய்த இளைஞர்கள் பலர் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினர்.

24 மணிநேரத்தில் நடைபெற்ற வாகனத் தணிக்கையில் மட்டும் 242 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பைக் ரேஸ், வீலிங் செய்தவர்கள் மட்டுமின்றி அதிவேகமாக வாகனங்களை ஓட்டி வந்தவர்கள், போதையில் வாகனம் ஒட்டியவர்கள் உள்ளிட்ட பலரிடம் இருந்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள என சென்னை போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.

30 கிலோ எடையை குறைத்த வரலட்சுமி சரத்குமார்! எப்படி தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios