சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் ராணுவ அதிகாரி பிரவீன்குமார் ஜோஷியை சுட்டுக்கொன்று விட்டு ராணுவ வீரர் ஜக்ஸிர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ராணுவ அதிகாரியான பிரவீன் குமார். இவர் அப்பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இன்று நள்ளிரவில் அவரது வீட்டுக்கு வந்த மற்றொரு ராணுவ அதிகாரியான ஜக்ஸிர் என்பவர் திடீரென பிரவீன் குமாரை சுட்டுக்கொன்றார். இதனையடுத்து, பயத்தில் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே ஜக்ஸிர் சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்டார். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பணிக்கு ஒழுங்காக வராததால் ஜக்ஸிர் என்பவரை பிரவீன் குமார் கண்டித்துள்ளார். இதனால், இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த ஜக்ஸிர் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த பிரவீன் குமார், ஜக்ஸிர் இருவரும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த  என்பது குறிப்பிடத்தக்கது.