குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. 5ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!

வள்ளலார் என்று அழைக்கப்படும் வடலூர் ராமலிங்க சுவாமிகள் நினைவு நாள் வரும் 5-ம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், பார்களை கண்டிப்பாக மூட வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Chennai All tasmac Shop closed...collector order

சென்னையில் வரும் 5ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு மூட அம்மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி உத்தரவிட்டுள்ளார். 

வள்ளலார் என்று அழைக்கப்படும் வடலூர் ராமலிங்க சுவாமிகள் நினைவு நாள் வரும் 5-ம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், பார்களை கண்டிப்பாக மூட வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Chennai All tasmac Shop closed...collector order

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை ஒட்டி பிப்ரவரி 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள், கிளப்புகளைச் சேர்ந்த பார்கள், ஓட்டல்களைச் சேர்ந்த பார்கள் உள்ளிட்டவை கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios