சென்னை, மணலியில் கொசுக்களை விரட்டும் லிக்விட் மெஷின் எரிந்து மூச்சு திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் மற்றும் பாட்டி உயிரிழந்து இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மணலி எம்எம்டிஏ இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்த உடையார் சோமாட்டோவில் ஊழியராக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது காலில் அடிபட்டு கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனையில் உடன் இருந்து அவரது மனைவி செல்வி கவனித்துக் கொள்கிறார். 

இந்த தம்பதிகளின் குழந்தைகளை வீட்டில் கவனித்துக் கொள்ள அவரது அம்மா சந்தான லட்சுமி ஊரிலிருந்து வந்துள்ளார். இவர்களது குடியிருப்புப் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்த காரணத்தால், லிக்விட் மிஷினை பயன்படுத்தி உள்ளனர். இவர்கள் நன்றாக உறங்கிக் கொண்டு இருக்கும்போது, அந்த மிஷின் சூடாகி உருகி அருகில் இருந்த அட்டப்பட்டியின் மீது விழுந்துள்ளது.

அதிலிருந்து அதிகளவில் புகை வெளியேறி உள்ளது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் கொசு விரட்டும் லிக்விட் நெடி மற்றும் அந்த அட்டைப்பெட்டியின் புகையை நான்கு பேரால் உணர முடியவில்லை. இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே நான்கு பெரும் உயிரிழந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் அதிகாலையில் எழுந்து வந்து பார்த்தபோது அந்த வீட்டு ஜன்னலில் இருந்து புகை வந்ததை பார்த்தனர். இதையடுத்து, தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது, நான்கு பேரும் உயிரிழ்ந்து இருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.