Asianet News TamilAsianet News Tamil

செங்கல்பட்டு, தென்காசி மாவட்ட சிறப்பு அதிகாரிகள் திடீர் மாற்றம் - ஒரே வாரத்தில் அரசு அதிரடி

புதிதாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களுக்கு தமிழக அரசு கடந்த வாரம் நியமித்த சிறப்பு அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.

Chengalpattu, Tenkasi District Special Officers Sudden Transfer
Author
Chennai, First Published Aug 2, 2019, 2:06 AM IST

புதிதாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களுக்கு தமிழக அரசு கடந்த வாரம் நியமித்த சிறப்பு அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டையும், திருநெல்வேலியில் இருந்து தென்காசியையும் பிரித்து, 2 புதிய மாவட்டங்களை, கடந்த 18ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். மேலும் இதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அந்தஸ்தில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்திருந்தார். இதைதொடர்ந்து தமிழக அரசு செங்கல்பட்டு, தென்காசி இரண்டு புதிய மாவட்டத்துக்கு 2 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து கடந்த வாரம் 26ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், அந்த இரண்டு அதிகாரிகளையும் மாற்றி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தமிழ்நாடு கடற்சார் ஆணையத்தின் தலைவராக இருந்த ஏ.ஜான் லூயிஸ் சிறப்பு அதிகாரியாகவும், தென்காசி மாவட்டத்திற்கு சர்க்கரை கழகத்தின் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்த ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கடந்த 26ம் தேதி அறிவித்தபோது, ஜான் லூயிஸ் தென்காசி மாவட்டத்திற்கும், அருண்சுந்தர் தயாளன் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டனர். அதுவே தற்போது, மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios