Asianet News TamilAsianet News Tamil

தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குஷியான செய்தி.. போனஸ் மதிப்பெண்களை அறிவித்தது தமிழக அரசு..!

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

chemistry exam...tamilnadu government has announced bonus mark
Author
Chennai, First Published May 28, 2020, 11:39 AM IST

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்குவதற்கு முன்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து முடிந்து விட்டது. ஆனால், கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் விடைத்தாள் திருத்தும் பணி தடைபட்டது. இதனிடையே, 4-வது கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில், மே 27-ம் தேதி முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

chemistry exam...tamilnadu government has announced bonus mark

இந்நிலையில், சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 202 மையங்களில் மொத்தம் 38,108 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

chemistry exam...tamilnadu government has announced bonus mark

இந்நிலையில், பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தமிழ் வழி மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறுகையில்:- தமிழ் வினாத்தாள் கேள்வி ஒன்றில் புரதம் என்ற தமிழ் சொல்லுக்கு பதிலாக புரோட்டின் என ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்த்து வழங்கியதால் மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் அந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே கூடுதல் மதிப்பெண்கள் உறுதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios