தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதுவகை கொரோனா ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 25ஆக உயர்ந்துள்ளது. இதில், தமிழகத்தில் ஒருவர் அடங்குவர்.இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. 

பிரிட்டனில் இருந்து மதுரை வந்த நபருக்கு உருமாறிய கொரோனா தொற்று இல்லை. பொதுமக்கள் காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் 3 நாள் 4 நாட்கள் கழித்து நுரையீரல் பாதிப்புடன் வராதீர்கள். அதற்கு முன்னரே வந்தால் நிவாரணம் பெறலாம். கிங்க்ஸ் மருத்துவமனையில் 1618 படுக்கைகள் மருத்துவமனையில் உள்ளனர். இதில் 58 நோய்த்தொற்று உள்ளவர்கள் மட்டுமே உள்ளனர். 125 பிசிஆர் சோதனையில் நெகட்டிவ் வந்தாலும் நுரையீரல் தொற்றுடன் உள்ளவர்கள் உள்ளனர்.120 படுக்கைகள் இங்கிலாந்திலிருந்து வருபவர்களுக்காக தயார் நிலையில் வைத்துள்ளோம். இதுவரை முதல் நாளிலிருந்து ஒரே ஒரு பாசிட்டிவ் மட்டுமே வந்துள்ளது. எடுக்கப்பட்ட மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மதுரையில் எடுக்கப்பட்டவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. நேற்று 20 பேர் வந்தவர்களுக்கு பாசிட்டிவ் வந்துள்ளது. அவர்கள் தொடர்புடைய 20 பேருக்கு பாசிட்டிவாக இருந்தது.

நேற்றிரவு 2 பேருக்கு பாசிட்டிவ் ஆகியுள்ளது. ஒருவர் கோவை, ஒருவர் சென்னை. அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மாதிரி புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வரும் நபர்களை மூன்று வகையாக சேகரித்தோம். மத்திய அரசு நமக்கு சொன்னது கடைசி 14 நாட்கள் பார்த்தால் போதும் என்றார்கள். ஆனால் நாம் கடந்த ஒரு மாதமாக வந்தவர்களை லிஸ்ட் எடுத்து சோதனை செய்கிறோம்.

அதில் 2080 பேரை நாம் கண்டறிந்துள்ளோம். அதில் 1593 பேரை கண்டுபிடித்து பரிசோதனை செய்துவிட்டோம். 487 பேர் உள்ளனர். அதில் 54 பேர் மீண்டும் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்றுவிட்டனர். மீதமுள்ளவர்கள் சில பேர் தங்கள் விலாசத்தை மாற்றி கொடுத்துள்ளனர். சென்னை மற்றும் செங்கல்பட்டு தவிர மற்ற மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஒன்றுமில்லை. புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.