இன்னும் ஆட்டம் முடியல! இன்று இரவும் சென்னையில் தரமான சம்பவம் இருக்காம்! தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்!
சென்னையில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
கடந்த 2 நாட்களாக சென்னையில் இரவில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னையில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதையும் படிங்க: சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை! ஸ்தம்பித்த சென்னை ஏர்போர்ட்! வானில் வட்டமடித்த விமானம்! பயணிகள் அவதி!
நேற்று நள்ளிரவு சூறைக்காற்று இடி மின்னலுடன் பெய்த பலத்த மழை பெய்தது. இதனால், சென்னை விமான நிலையத்தில் 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எக்ஸ் தள பக்கத்தில்: மீனாம்பாக்கத்தில் - 241.4 மி.மீ , நுங்காம்பாக்கத்தில் 189. 8 மி.மீ மழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் சாதாரணமாக 55-60 மி.மீ மழை பெய்யும், ஆனால் ஜூன் மாதம் நிறைவடைய இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில், சராசரி மழையை விட கிட்டத்தட்ட 4-5 மடங்கு மழை பெய்கிறது இந்த ஜுன் மாதம் சென்னைக்கு மிக அருமையான மாதம். இன்று இரவும் மீண்டும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.