- Home
- Gallery
- சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை! ஸ்தம்பித்த சென்னை ஏர்போர்ட்! வானில் வட்டமடித்த விமானம்! பயணிகள் அவதி!
சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை! ஸ்தம்பித்த சென்னை ஏர்போர்ட்! வானில் வட்டமடித்த விமானம்! பயணிகள் அவதி!
சென்னையில் நள்ளிரவில் சூறைக்காற்று இடி மின்னலுடன் பெய்த பலத்த மழை சென்னை விமான நிலையத்தில், 2வது நாளாக 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Chennai Heavy Rain
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2வது நாளாக நேற்று நள்ளிரவில் பெய்த பலத்த மழை, இடி மின்னல் சூறைக்காற்று காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
Chennai Airport
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 70 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து 158 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன. பின்னர் கோழிக்கோடு விமானம் திருச்சிக்கும், டெல்லி விமானம், பெங்களூர்க்கும் திருப்பி அனுப்பப்பட்டன.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. ஒரே நாளில் சென்னையில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Flight services Affected
அதைப்போல் மதுரை, மும்பை, கோவை, டெல்லி, ஐதராபாத், கோவா, வாரணாசி உள்ளிட்ட 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தத்தளித்தன. மழை, சூறைக் காற்று, இடி மின்னல் வேகம் குறைந்த பின் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரை இறங்கின. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய துபாய், குவைத், சிங்கப்பூர், கோலாலம்பூர், அபுதாபி, பாங்காக், டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட 14 விமானங்கள், இடி மின்னல் சூறைக்காற்று வேகம் குறைந்த பின் தாமதமாக புறப்பட்டு சென்றன.
இதையும் படிங்க: Ration Card Holders: ஜூன் 30 வரை கிடைக்கும்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ் சொன்ன அமைச்சர் சக்கரபாணி!
Passengers suffered
சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு திடீரென பெய்த பலத்த மழை, இடி மின்னல் சூறைக்காற்று காரணமாக, இரண்டு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர், திருச்சிக்கு திரும்பிச் சென்றதோடு,10 வருகை விமானங்கள், 14 புறப்பாடு விமானங்கள் தாமதம் ஆகி, 26 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.