Asianet News TamilAsianet News Tamil

முக்கிய வழக்குகளை விசாரித்த சிபிசிஐடி இயக்குநர் ஜாபர் சேட்டை தூக்கியடித்த தமிழக அரசு..!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

cbcid dgp jaffar sait transferred
Author
Tamil Nadu, First Published May 26, 2020, 2:19 PM IST

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

2019ம் ஆண்டு சிபிசிஐடி இயக்குனராக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டார். இதுவரை தொடர்ந்து அதே பதவியில் அவர் நீட்டித்து வந்தார். சமீபத்தில் தமிழக டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெற்றதை அடுத்து அந்த இடத்திற்கு புதிய  டிஜிபியாக ஜாபர் சேட்  மற்றும் ஜே.கே. திரிபாதி ஆகியோர் பெயர்கள் அடிப்பட்டன. ஆனால்.  பணிக்காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கூட ஜாபர்சேட் ஆளாகியுள்ளார். மேலும், அவர் மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகளும் இருந்தன. கனிமொழியுடன் இவர் 2ஜி தொடர்பாக பேசி வெளியான ஆடியோ அப்போதைய திமுக அரசை ஆட்டிப் பார்த்தது.

cbcid dgp jaffar sait transferred

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு உள்ளிட்டவற்றை சிபிசிஐடி தான் விசாரித்து வருகிறது. இவற்றையெல்லாம் விசாரித்து வந்ததில் முக்கிய பங்காற்றியவர் ஜாபர் சேட்.  இவரது பணியிடமாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருப்படுகிறது. 

cbcid dgp jaffar sait transferred

இந்நிலையில், சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், உணவுப்பொருள் வழங்கல் கண்காணிப்புப் பிரிவு டிஜிபியாக பதவி வகித்துவரும் பிரதீப் வி பிலிப் சிபிசிஐடி பிரிவு டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். இதை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios