Asianet News TamilAsianet News Tamil

தந்தை பெயர் மட்டும் வேண்டும், தாயார் பெயர் வேண்டாமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

திருமணம் ஆகாத கணவனை இழந்த பெண்கள் செயற்கை முறையில் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் போது தந்தை குறித்த விவரங்கள கோர முடியாது.  நாட்டை தாய்நாடு மற்றும் மொழியை தாய்மொழி, நதியை பெண்களில் பெயரில் அழைக்கும் சூழலில் அனைத்து அரசு துறை ஆவணங்களில், விண்ணப்பங்கள் சான்றிதழ்களில் தாய் பெயரை குறிப்பிடும் வகையில் உரிய திருத்த கொண்டு வர வேண்டும்.

case where the mother name was mentioned in all the documents.. Chennai high court Order
Author
Chennai, First Published Sep 6, 2021, 7:13 PM IST

அரசு துறைகளில் அனைத்து ஆவணங்களில் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனி பிரிவை ஏற்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்;-  திருமணம், பூ புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தாய், தந்தையின் பெயரை குறிப்பிடுகிறார்கள். ஆனால், அரசு ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவணங்கள், கல்வி ஆவணங்கள், இருப்பிட சான்று மற்றும் சாதி சான்று, வருமான சான்று, பூர்வீக சான்று பெருவதற்கான விண்ணப்பங்களில் தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.  

case where the mother name was mentioned in all the documents.. Chennai high court Order

இந்திய அரசியல் சட்டம் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்கபட்டுள்ள நிலையில் சமீபத்தில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களில் தாயாரின் பெயர்கள் கேட்கபடவில்லை என குறிப்பிட்டுள்ளார். திருமணம் ஆகாத கணவனை இழந்த பெண்கள் செயற்கை முறையில் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் போது தந்தை குறித்த விவரங்கள கோர முடியாது.  நாட்டை தாய்நாடு மற்றும் மொழியை தாய்மொழி, நதியை பெண்களில் பெயரில் அழைக்கும் சூழலில் அனைத்து அரசு துறை ஆவணங்களில், விண்ணப்பங்கள் சான்றிதழ்களில் தாய் பெயரை குறிப்பிடும் வகையில் உரிய திருத்த கொண்டு வர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். 

case where the mother name was mentioned in all the documents.. Chennai high court Order

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 6 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios