சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், ஐடி ஊழியர்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
கத்திப்பாரா மேம்பாலத்தில் விபத்து
சென்னை திருவொற்றியூரிலிருந்து ராமாபுரத்தில் உள்ள டிஎல்எப் ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதற்காக இரண்டு பெண்கள் ஒரு செக்யூரிட்டி மற்றும் கார் ஓட்டுனர் என நான்கு பேர் ராமாபுரத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். கார் கத்திப்பாரா மேம்பாலத்தின் வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரின் மோதி விபத்துக்குள்ளானது.
வலியால் அலறி துடித்த ஐடி ஊழியர்கள்
இதனால், காரில் பயணித்த பெண்கள் உள்ளிட்டோர் காயம் அடைந்து வலியால் அலறி துடித்தனர். இதனையடுத்து சக வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெண் ஐடி ஊழியர் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
