- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னையில் ஐடி பெண் ஊழியரின் வாயை பொத்தி பாலியல் தொல்லை! யோகேஸ்வரன் சிக்கியது எப்படி? பரபர தகவல்!
சென்னையில் ஐடி பெண் ஊழியரின் வாயை பொத்தி பாலியல் தொல்லை! யோகேஸ்வரன் சிக்கியது எப்படி? பரபர தகவல்!
சென்னையில் ஐடி ஊழியரிடம் வாயை பொத்தி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஐடி பெண் ஊழியர்
சென்னை பெரும்பாக்கத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு இளம்பெண் பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென அந்த இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து வாயை பொத்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிசிடிவி காட்சிகள்
இதனை சற்றும் எதிர்பாராத பெண் அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த இளைஞர் அப்பெண்ணை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
குற்றவாளி கைது
இதையடுத்து இன்று அதிகாலை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹோட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் குடிபோதையில் தவறு செய்துவிட்டதாகவும் மன்னித்து விடுங்கள் என்று போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் அவர் மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
சிறையில் அடைப்பு
காவல்நிலைய கழிவறையில் கைதான யோகேஸ்வரன் வழுக்கி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் மாவு கட்டு போட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து யோகேஸ்வரனை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.