Tamilnadu Weather: இன்னும் 2 நாட்கள் தான்! கனமழைக்கு நாள் குறித்த வானிலை மையம்! அலறும் பொதுமக்கள்!
Tamilnadu Weather: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால் மழை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Northeast Monsoon
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இரண்டு வாரத்திற்கு முன்பு ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டு சென்றது. அதன் பிறகு சில நாட்கள் மழை ஓய்ந்திருந்தது. இதனையடுத்து வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
Tamilnadu Rain
குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழக மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது. இந்நிலையில் இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் குமரிக்கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும். இதனால் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Balachandran
இதனிடையே தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அந்தமான் கடல் பகுதியில் டிசம்பர் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன் நகர்வை பொறுத்தே தமிழ்நாட்டில் மழை இருக்குமோ என கணிக்க முடியும் என தெரிவித்திருந்தார்.
Low Pressure
இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். பின்னர் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 16-ம் தேதி முதல் மீண்டும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியும் தென் மாவட்டங்களுக்கே அதிக கனமழை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.