இது மாதிரி யாருக்கும் நடக்ககூடாது கடவுளே.. மகள் கண்முன்னே காரில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த தந்தை
மதுரவாயல் சாலையில் இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவில் இன்ஜினியர் மகள் கண்ணெதிரே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் சாலையில் இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவில் இன்ஜினியர் மகள் கண்ணெதிரே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாடி பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் பெல்லார்மின் (45) என்ஜினீயர். இவரது மகள் சகாய ஏஞ்சலின் ஷாலினி. கல்லூரி மாணவி. நேற்று காலை 8 மணியளவில் ராபர்ட், தனது மகள் ஷாலினியை பழைய மகாபலிபுரம் சாலை காலவாக்கத்தில் உள்ள கல்லூரியில் விடுவதற்காக காரில் அழைத்து சென்றார். மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென எதிர்பாராத விதமாக முன்னால் இரும்பு கம்பிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.
இதில் லாரியின் பின்பக்கம் நீட்டிக்கொண்டிருந்த இரும்பு கம்பிகள் காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு ராபர்ட்டின் கழுத்து, நெஞ்சில் குத்தியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கார் இருக்கையில் இருந்தபடியே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டு அருகில் அமர்ந்து இருந்த அவரது மகள் சகாய ஏஞ்சலின் ஷாலினி அலறி துடித்தார்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராபர்ட்டின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.