ஒரு கவர்னர் இப்படி பேசலாமா..? ரொம்ப வேதனையா இருக்கு.. சின்மயி ஆதங்கம்..!
நல்ல படிக்க வேண்டும், சாதனை செய்து, மேலும் வளர்ச்சி அடைவேன் என்பது தான் பெண் உரிமையே தவிர, என் இஷ்டத்திற்கு உடை உடுத்துவேன் என்பது பெண் உரிமை இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறியதற்கு சின்மயி பதிலளித்துள்ளார்.
நல்ல படிக்க வேண்டும், சாதனை செய்து, மேலும் வளர்ச்சி அடைவேன் என்பது தான் பெண் உரிமையே தவிர, என் இஷ்டத்திற்கு உடை உடுத்துவேன் என்பது பெண் உரிமை இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறியதற்கு சின்மயி பதிலளித்துள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் இந்திய பத்திரிக்கை ஆணையம் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை;- பெண்கள் தங்களுடைய துணிச்சல் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்காக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 181 இலவச எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆண்களின் விருப்பம் பெண்களின் மீது பெண்களின் திணிக்கப்படுகிறது. அது தவறு எனவும் இதுபோன்ற மகளிர் தின நாட்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் அதற்கான தீர்வுகள் இத்தகைய நாளில் காண வேண்டும் என தெரிவித்தார். குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான மன அழுத்தத்தைப் போக்க அனைத்து பள்ளிகளிலும் மனோத்துவ கல்வி வேண்டும் என தெரிவித்தார்.
தற்கொலை முடிவை பெண்கள் எக்காலத்திலும் எடுக்கக்கூடாது
தங்களது வாழ்நாளில் எவ்வளவு பிரச்சினை வந்தாலும் பெண்கள் போராடி வெற்றி பெற வேண்டும். தற்கொலை முடிவை பெண்கள் எக்காலத்திலும் எடுக்கக்கூடாது. இன்றைய சமுதாயத்தில் கண்டிப்பாக பெண்களுக்கான பாதை மலர் பாதையாக இருக்காது. கற்கள் மற்றும் முட்கள் கலந்த பாதையாக இருக்கும் எனவும் இதனை பெண்கள் எதிர்கொள்ள வேண்டும். இரும்பு போல இருந்து தன்னம்பிக்கையுடன் துணிச்சலுடன் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். ஆண்கள் பெண்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் கனவும் உங்களின் எண்ணத்திற்கு மதிப்பளித்து பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்ற நிலை ஏற்பட வேண்டும் என்றார்.
இஷ்டத்திற்கு உடை உடுத்துவேன் என்பது பெண் உரிமை இல்லை
பெண்கள் தைரியமாக இருக்க வேண்டுமெனவும் எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு செயலாற்ற வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் காரணத்தினால் தான் நான் இந்த மேடையில் நின்று கொண்டு இருப்பதாகவும் அதனால் பெண்கள் துணிச்சலுடன் போராட்ட குணத்துடன் இருக்கவேண்டும் என தெரிவித்தார். நல்ல படிக்க வேண்டும், சாதனை செய்து, மேலும் வளர்ச்சி அடைவேன் என்பது தான் பெண் உரிமையே தவிர, என் இஷ்டத்திற்கு உடை உடுத்துவேன் என்பது பெண் உரிமை இல்லை என்று பேசியிருந்தார். இதனை பாஜகவை சேர்ந்த காய்த்ரி ரகுராம் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு சின்மயி பதிலளித்துள்ளார்.
சின்மயி ஆதங்கம்
இதுதொடர்பாக சின்மயி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஒரு முக்கிய அரசியல்வாதியின் இத்தகைய கருத்து கவலையளிக்கிறது. பெண்கள் படிக்கலாம், சாதிக்கலாம், வளரலாம், நிதி சுதந்திரம் பெறலாம் மற்றும் நாம் விரும்புவதை அணியலாம். பெண்கள் புடவை அணிவது அல்லது பழமைவாத உடை அணிவது தாக்குதலைத் தடுக்காது. அதை நாம் அனைவரும் அறிவோம் என தெரிவித்துள்ளார்.